சொல் பொருள்
குவி, ஊக்கம் குன்று, பாய்மரம்
சொல் பொருள் விளக்கம்
குவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fold, close, shut, as a flower
lose courage, zeal, or enthusiasm
mast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1 நெய்தல் மலர்கள் குவிந்துபோக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ, வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல் கெட சீறி – பட் 276,277 வடநாட்டவர் களையிழக்க, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக, பாண்டியன் வலியழிய, சினங்கொண்டு, பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9 பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை, அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரத்தில் சென்றுதங்கும் தூங்கு நாவாய் துவன்று இருக்கை மிசை கூம்பின் நசை கொடியும் – பட் 174,175 அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில், (அவற்றின்)மேல் (நட்ட)பாய்மரத்தின் (மேலெடுத்த)விருப்பம் தரும் கொடிகளும் கூம்பொடு மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது – புறம் 30/11,12 கூம்புடனே மேற் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேற்பாரத்தையும் பறியாமல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்