சொல் பொருள்
கைகாரன் – திறமையாளன். சூழ்ச்சியாளன், ஏமாற்றாளன்.
சொல் பொருள் விளக்கம்
‘அவன் பெரிய கைகாரன்’ என்றால் திறமையாளன் என்பது பொருள். ஆனால் அத்திறமை பாராட்டுக்குரிய பொதுநலத் திறமையைக் குறியாமல் தன்னலச் சூழ்ச்சியைக் குறிக்கும். “அவன் பின்னால் போகாதே; அவன் பெரிய கைகாரன்; உன்னை ஐயோ என்று விட்டுவிடுவான்” என்பதில் அவன் சூழ்ச்சித் திறமும் செயல்விளைவும் விளங்கும். கைகாரன் முதல்வேலை நம்பவைத்தல்; அடுத்து நம்பியவனே சுற்றி வளையவரச் செய்தல்; அதன்பின் வலையுள் படும்மான் போலவும், மீன்போலவும் அவனே வந்து சிக்கலில் மாட்டிக் கொள்ளவைத்தல் ‘இவையெல்லாம் கைகாரன் வேலை.’ கை என்பது செயல் திறம் என்னும் பொருளது. அதன் எதிர்மறையாவது இது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்