சொல் பொருள்
கைதூக்கி – சொன்னபடி கேட்டல்
சொல் பொருள் விளக்கம்
கைதூக்கல் என்பது ஒப்புகைப் பொருளும் தருவது. ஆனால் அது, உண்மையென்று தோன்றுமானால்தான் கைதூக்கல் நிகழும். இல்லையானால், கைதூக்காமல் கருத்துக்கு ஒப்பளிக்காமல் இருத்தலுண்டு. இக் ‘கைதூக்கி’ அத்தகைத்தன்று. சரியானது, தவறானது என்று பார்த்துக் கைதூக்காமல், என்ன சொன்னாலும் சொன்னவர் கருத்தை ஏற்பதாகத் தூக்குவதாம். ‘தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’ என்பது இலக்கியக்காட்சி. அதற்கு உலகியல் காட்சி கைதூக்கியாம். முன்னால் இருப்பவன் கையைத் தூக்கிக்காட்டினால் கண்ணாடி அப்படியே காட்டுமன்றோ. அதற்கு மாறாகக் காட்டாதே. அத்தகையனே கைதூக்கி என்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்