சொல் பொருள்
கைந்நீளல் – தாராளம், அடித்தல் , திருடல்
சொல் பொருள் விளக்கம்
கைந்நீட்டல் ‘கொடை’ என வழங்கப்படுகிறது. “அவன் கைநீட்ட மாட்டான்” என்பது கொடான் என்னும் குறிப்பினதாம். ‘கைந்நீளம்’ என்பது கையின் நெடுமையைக் குறியாமல் நீட்டிக் கொடுக்கும் கொடையைக் குறிப்பதாயிற்று ‘தருகை நீண்ட தயதரன்’ என்றார் கம்பரும்.
கைநீட்டல் என்பது அடித்தல் பொருளும் தரும். “இனிக் கண்டபடி கையை நீட்டாதே” என்று கண்டிப்பது உண்டு. தன்னிற் சிறுவனை அடிக்கும் சிறுவனை இவ்வாறு கண்டிப்பதைப் பார்த்தால் கைந்நீட்டலுக்கு அடித்தல் பொருளுண்மை விளங்கும். கைநீளல் திருடுதல் பொருளில் வழங்குவதும் உண்டு. நீட்டி எடுப்பதுதானே திருட்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்