சொல் பொருள்
விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது
கைபோடல் – தழுவுதல்
சொல் பொருள் விளக்கம்
மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கை போடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு. அது விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது. கையின் மேல் துணியைப் போட்டுப் பிறர் அறியாவாறு விரல்குறி வழியாகக் குழூஉக் குறியாகப் பேசுவர். அவர்கள் விலைத் தொகையாகக் குறிப்பவை அவர்கள் மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும்.
உரிமையல்லா ஒருத்தியைத் தழுவுதல் கைபோடலாகக் குறிக்கும் வழக்குண்டு. கைபோடுதல் என்பது பாலுறவைச் சுட்டலும் வழக்கே. உரிமையிலா இழிவுப் பொருளில் அன்றி, உரிமையாம் உயர் பொருளில் இது வழங்குமாறு இல்லை. “என்மேல் கைபோட்டுவிட்டாய்; அந்தக் கையை ஒடிக்கவில்லை பிறகு பார்’ என்பது ஒவ்வாக் கைபோடலை ஒழித்துக்கட்டவெழும் வஞ்சினம். மாடு பிடிக்கும் தரகர் விலைபேசத் துணியைப் போட்டுக் கையை மறைத்துப் பேசுதலும் கை போடலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்