சொல் பொருள்
மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு
கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு. திருமணச் சடங்கில் மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தருதல் தொல் பழநாள் தொட்ட வழக்கு ஆதலால் கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. பிடித்துக் கொடுக்கும் ‘கொடையே’ திருமணம் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. நாகர்கோயில் வட்டாரத்திலும் இவ்வழக்குச் சொல் உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்