சொல் பொருள்
கைப்பிடித்தல் – மணமுடித்தல்
சொல் பொருள் விளக்கம்
கையைப் பிடித்தல் என்னும் பொருளை விடுத்துத் திருமணம் என்னும் பொருளைத் தருவது கைப்பிடித்தலாம். திருமண நிறைவேற்றத்தின் பின்னர் பெண்ணைப் பெற்றவர் மாப்பிள்ளையின் கையில் பெண் கையைப் பிடித்துத் தருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மணமேடையை விடுத்துச் செல்லும் கணவன் பின்னே அவன் கையைப் பற்றிக் கொண்டே மனைவியும் செல்லுதல் வழக்கம். “கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்” என்பது ஆண்டாளார் மொழி. அகத்திட்ட கையை அகலாதே என்பதாகக் ‘கவவுக்கை நெகிழாமல்’ வாழ்க வென்னும் வாழ்த்து சிலம்பில் இடம் பெற்றுள்ளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்