சொல் பொருள்
கையாலாகாதவன் – செயலற்றவன்
சொல் பொருள் விளக்கம்
கையிருக்கும். எடுப்பான் ; கொடுப்பான் ; கைவேலை செய்வான். எனினும் கையாலாகாதவன் எனப் பெயரும் பெறுவான். எப்படி? வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ பொறுப்பாளனாக இருப்பான். தான் திட்ட வட்டமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் சொல்வார் சொற்படி செய்வான் ; அதிலும் நாளும் பொழுதும் புதுப்புது ஆள்களை நம்பி நிலைப்படாச் செயல் செய்வான். இத்தகையனைக் கையாலாகாதவன் என்பர். தன் மூப்பாகச் செய்ய மாட்டாதவனே கையாலாகாதவன் என்க. “அவனை நம்ப வேண்டா; அவன் கையாலாகாதவன்” என்பது வழக்கு. கை என்பது செயல் என்னும் பொருளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்