சொல் பொருள்
காணிக்கைப் பொருள், அன்பளிப்பு, நன்கொடை
சொல் பொருள் விளக்கம்
காணிக்கைப் பொருள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
present
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்ளும் கண்ணியும் கையுறை ஆக நிலைக்கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் நிலைத்துறை கடவுட்கு உளப்பட ஓச்சி – அகம் 156/13-15 கள்ளினையும் மாலையையும் காணிக்கைப் பொருளாகவும், நிமிர்ந்த கொம்பையுடைய வெள்ளாட்டின் தொங்குகின்ற செவியையுடைய கிடாயையும் துறையில் நிலைபெற்ற கடவுளுக்கு சேர்த்துச் செலுத்தி, அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும் மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து பெருமான் நகை முகம் காட்டு என்பாள் – கலி 82/10-13 ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான், அவளும் கொம்புள்ள இடபம் பொறித்த மோதிரத்தை அன்பளிப்பாக அணிந்து ‘பெருமானே! சிறிது சிரித்துக் காட்டு’ என்றாள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்