சொல் பொருள்
பெரிய புலவர் உரைவிளக்கம் செய்வார். அவர்க்குத் துணையாக வந்தவர் இசையோடு நூலைப்பார்த்துப் படிப்பார். அவரைக் கையேடு என்பது வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கையேடு என்பது கையில் உள்ள ஏடு என்பதைக் குறியாமல், கையில் ஏடு வைத்துப் படிப்பாரைக் குறிப்பதாகும். சில அரிய பெரிய நூல்களை விரிவுரை சொல்லியும் கதையுரைத்தும் பாராயணம் செய்தல் அண்மை வரை சிற்றூர்களில் நிகழ்ந்தன. பெரிய புலவர் உரைவிளக்கம் செய்வார். அவர்க்குத் துணையாக வந்தவர் இசையோடு நூலைப்பார்த்துப் படிப்பார். அவரைக் கையேடு என்பது வழக்கு. கையேடு படிப்பவர் பழகிப்பழகி விரிவுரை கூறுபவராகி விடுவது வழக்கம். இந்நிகழ்ச்சி இரவில் ஊர்ப்பொது இடங்களில் நிகழும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்