சொல் பொருள்
கையோங்குதல் – வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல்
சொல் பொருள் விளக்கம்
கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இருபக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலியவற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும் இந்தக்கை ஓங்கிவிட்டது என்பது வெற்றி முகத்தைக் குறிப்பதாம், ஒருவன் செல்வப்பெருக்கு அடைந்தால் அவன்கை ஓங்கிவிட்டதாகக் கூறுவதும் வழக்கு. ஓங்குதல் – தூக்குதல். அப்பொருளில் இருந்து ஆட்டம், போர், பொருள் முதலியவற்றின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் இடமாகச் சொல்லப்படுவதால் வழக்குச் சொல்லாயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்