சொல் பொருள்
கை தூக்கல் – உதவுதல், ஒப்புகை தருதல்
சொல் பொருள் விளக்கம்
கைகொடுத்தல் போல்வதே கைதூக்கலுமாம், கைதூக்கி விடுதல் என்பது பள்ளத்துள் இருப்பாரை மேட்டில் சேர்த்தல். அது போல், கடன்துயர், வறுமை முதலியவற்றுக்கு ஆட்பட்டு இடர்ப்படுவார்க்கு உதவுவதால் அவர்கள் அவ்விடர் நீங்குவர். அந்நிலையில் “நீங்கள் கைதூக்கி விட்டதால் தான் கவலையில்லாமல் வாழ்கிறேன்” என நன்றி பாராட்டுதல் உண்டு. இனி, கைதூக்கல் என்பது ஒப்புகை தருதலையும் குறிக்கும். கைதூக்கச் சொல்லி வாக்கெடுப்பு நடத்துவதும் நடைமுறையே. என் கருத்தைச் சரி என்று ஏற்பவர்கள் கைதூக்குங்கள் என்பதில் ஒப்புகைப் பொருள் உள்ளமை தெளிவாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்