கொங்கு என்பது பூந்தாது, தேன், கொங்கு நாடு
1. சொல் பொருள்
பூந்தாது, தேன், கொங்கு நாடு
கொங்கு என்பது தேன் என்னும் பொருளிலும் கொங்கு நாடு என்னும் பெயரீட்டிலும் பெருக வழக்குடையது.
குமரிப் பெண் என்னும் பொருளில் ஒட்டன் சத்திர வட்டார வழக்கில் உள்ளது
2. சொல் பொருள் விளக்கம்
கொங்கு என்பது தேன் என்னும் பொருளிலும் கொங்கு நாடு என்னும் பெயரீட்டிலும் பெருக வழக்குடையது. அது, குமரிப் பெண் என்னும் பொருளில் ஒட்டன் சத்திர வட்டார வழக்கில் உள்ளது. துய்ப்பினிமை கருதிய பெயரீடு ஆகலாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
pollen of flowers, honey, A region called kongu
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71 இந்திர கோபத்தை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால் கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184 தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே – புறம் 373/8 கொங்குநாட்டை வென்ற வெற்றியையுடைய வேந்தனே. கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை - குறி 83 கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி - குறு 2/1 அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து - குறு 49/1 கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் - ஐங் 226/3 ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர - கலி 29/8 இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப - அகம் 142/24 கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது - தேம்பா:2 26/2 கொங்கு அயல் திமிசு சூழ் குளிர பூத்தன - தேம்பா:12 41/2 கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப - தேம்பா:12 84/1 கொண்ட-கால் அதற்கு உவமை குணிப்பர் அல்லால் கொங்கு அலர் கோல் - தேம்பா:18 16/3 கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட - தேவா-சம்:255/1 கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன - தேவா-சம்:476/2 கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை - தேவா-சம்:766/3 கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக - தேவா-சம்:921/2 வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி - தேவா-சம்:1111/1 கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் - தேவா-சம்:1274/1 கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி - தேவா-சம்:1396/3 கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச - தேவா-சம்:1780/3 கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் - தேவா-சம்:1900/3 கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை - தேவா-சம்:1912/3 கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர - தேவா-சம்:1920/1 கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய - தேவா-சம்:2019/1 கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும் - தேவா-சம்:2099/1 கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் - தேவா-சம்:2116/2 கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே - தேவா-சம்:2547/4 கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் - தேவா-சம்:2786/1 கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை - தேவா-சம்:2820/1 கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து - தேவா-சம்:3035/1 சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் - தேவா-சம்:3528/1 கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் - தேவா-சம்:3570/3 கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே - தேவா-சம்:3573/3 கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு - தேவா-சம்:3703/1 கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் - தேவா-சம்:3873/1 கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே - தேவா-அப்:1762/4 கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு - தேவா-அப்:1800/3 கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என - தேவா-அப்:1849/3 கொங்கு தண் குமரி துறை ஆடில் என் - தேவா-அப்:2067/2 கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் - தேவா-அப்:2330/1 கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி - தேவா-அப்:2406/2 கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய - தேவா-அப்:2573/3 கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் - தேவா-அப்:2794/2,3 கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே - தேவா-அப்:2837/4 கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை - தேவா-சுந்:97/1 கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் - தேவா-சுந்:307/3 கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே - தேவா-சுந்:433/1 கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:636/4 கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் - தேவா-சுந்:732/1 கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் - தேவா-சுந்:1016/1 கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி - திருவா:7 17/3 கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி - திருவா:16 9/5 குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே - திருக்கோ:119/4 கோர நெறி கொடு கொங்கு புக்காரே - திருமந்:273/4 கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி - திருமந்:1177/1 குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின் - திருமந்:2892/1 கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது - திருமந்:2930/1 கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட - 1.திருமலை:1 23/2 கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் - 1.திருமலை:3 20/3 கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து - 1.திருமலை:5 10/3 கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் - 3.இலை:5 19/4 கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் - 6.வம்பறா:1 626/2 கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி - 6.வம்பறா:1 645/2 கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் - 6.வம்பறா:1 984/4 கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய - 6.வம்பறா:2 153/2 கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள - 6.வம்பறா:2 251/4 கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் - 6.வம்பறா:2 270/2 கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற - 7.வார்கொண்ட:4 141/1 மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று - 7.வார்கொண்ட:4 172/2 கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு - 9.கறை:2 2/2 கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் - 10.கடல்:4 2/4 கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் - நாலாயி:706/3 கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய் - நாலாயி:721/1 கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர் - நாலாயி:808/3 கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் - நாலாயி:1018/1 கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன - நாலாயி:1187/3 கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் - நாலாயி:1195/3 கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் - நாலாயி:1220/1 கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் - நாலாயி:1284/3 கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர் - நாலாயி:1479/1 கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை - நாலாயி:1480/1 கொங்கு ஏறு சோலை குடந்தை கிடந்தானை - நாலாயி:1526/3 கொங்கு மலி கரும் குவளை கண் ஆக தெண் கயங்கள் - நாலாயி:1675/1 கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் - நாலாயி:1766/3 கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் - நாலாயி:1771/1 கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1794/4 கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே - நாலாயி:1799/4 கொங்கு ஆர் சோலை குடந்தை கிடந்த மால் - நாலாயி:1949/3 கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே - நாலாயி:1954/4 கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் - நாலாயி:2060/2 கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2363/3 கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர் - நாலாயி:3506/3 கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் - நாலாயி:3507/3 கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே - நாலாயி:3619/4 கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் - நாலாயி:3847/3 குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் - திருப்:52/4 கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே - திருப்:61/6 வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே - திருப்:78/2 ஏன் கால் பங்கு ஆக நற்புறு பூ கால் கொங்கு ஆரும் மெத்தையில் - திருப்:89/5 கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் - திருப்:97/4 கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் - திருப்:97/4 கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே - திருப்:102/5 உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும் - திருப்:184/5 கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண் - திருப்:491/3 கொங்கு உலாத்தி தழைக்கும் கா பொன் கொண்டல் ஆர்த்து சிறக்கும் காட்சி - திருப்:591/15 கொங்கு நாட்டு திரு செங்கோட்டு பெருமாளே - திருப்:591/16 கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய - திருப்:769/1 கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே - திருப்:857/2 கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் - திருப்:928/7 கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே - திருப்:935/8 கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே - திருப்:935/8 கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது - திருப்:1159/5 கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க - சீறா:1956/3 கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் - சீறா:2854/2 கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் - வில்லி:10 84/4 கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் - வில்லி:13 76/4 கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் - வில்லி:41 206/3 கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி - வில்லி:41 238/3 கொங்கு அலர் கோதை கொண்டு புறத்து ஓச்சியும் - உஞ்ஞை:42/186 கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன - உஞ்ஞை:42/206 கொங்கு ஆர் கோடலொடு கொய்யல் குழைஇ - உஞ்ஞை:51/51 கொங்கு அலர் நறும் தார் குமரன் முன்னர் - இலாவாண:7/10 கொங்கு அலர் கோதையை பண்டு முன் பயின்ற - இலாவாண:7/149 கொங்கு அலர் நறும் தார் கோல மார்பில் - இலாவாண:17/118 நங்காய் நல்லா கொங்கு ஆர் கோதாய் - இலாவாண:18/81 குராஅம் பாவையும் கொங்கு அவிழ் முல்லையும் - இலாவாண:19/155 கொங்கு அலர் கோதை நங்கை நம் பெருமகள் - மகத:6/137 கொங்கு அணி மலரின் கூட்டுவனர் உய்த்து - மகத:12/87 கொங்கு அலர் கோதை எங்கையை பொருளொடு - மகத:17/55 கொங்கு அலர் கோதையை கொடுக்கு நாளாதலின் - மகத:22/73 கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ - புகார்:1/2 கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் - புகார்:10/220 கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை - வஞ்சி:30/177 கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் - மணி:0/68 கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு - மணி:23/38 கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ - மணி:28/189 முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின் - சிந்தா:1 48/2 கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம் - சிந்தா:1 94/4 கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார் - சிந்தா:1 145/2 கொங்கு அலர் கோதை மாழ்கி குழை முகம் புடைத்து வீழ்ந்து - சிந்தா:1 267/3 கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல் - சிந்தா:3 528/3 கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப - சிந்தா:3 547/3 கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம் - சிந்தா:3 603/4 கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும் - சிந்தா:3 643/2 கொங்கு உண் மலர் கோதையொடு குருசில் செலும் வழிநாள் - சிந்தா:3 850/3 கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல் - சிந்தா:4 949/2 கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர் - சிந்தா:5 1271/3 கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ் முகட்டின் அங்கண் - சிந்தா:5 1281/2 கொங்கு ஒளிக்கும் குழலாய் என கூறினான் - சிந்தா:5 1334/4 கொங்கு அலர் கோதையர் கண்டு அகம் எய்தி - சிந்தா:6 1477/2 கொங்கு அலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும் - சிந்தா:7 1834/2 கொங்கு உண் குழல் தாழ கோட்டு எருத்தம் செய்த நோக்கு - சிந்தா:8 1971/3 கொங்கு அலர் கோதை சூட்டி குழல் நலம் திருத்தினானே - சிந்தா:9 2064/4 கொங்கு அலர் கண்ணி சேர்த்தி குங்குமம் எழுதினானே - சிந்தா:9 2098/4 குனி சிலை தோற்ற மன்னர் கொங்கு கொப்புளிக்கும் நீல - சிந்தா:10 2199/2 கொங்கு உண் நறும் பைம் தார் கோமான் இங்கே வருக என்றாள் - சிந்தா:13 2607/4 கொங்கு விம்மு பூம் கோதை மாதரார் - சிந்தா:13 2680/1 கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக - சிந்தா:13 2805/3 கொங்கு விம்மு குளிர் பிண்டி குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப - சிந்தா:13 2812/1 கொங்கு உடை கோதையும் கொய்து நீக்கினாய் - சிந்தா:13 3033/2 கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா - பால:7 27/2 கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் - அயோ:13 25/4 கொங்கு அலர் நறு விரை கோதை மோலியாய் - அயோ-மிகை:1 16/1 கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு - ஆரண்:12 1/3 கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா - கிட்:11 51/2 கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி - சுந்:2 113/3 கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை - சுந்-மிகை:14 3/2 அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் - நள:189/2 கொங்கு ஏயும் தாராள் குறித்து - நள:321/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்