சொல் பொருள்
கொசுவிரட்டல் – வணிகம் படுத்து விடுதல்
சொல் பொருள் விளக்கம்
ஈ விரட்டுதல் போன்றது இக்கொசு விரட்டுதலும். வெருட்டுதல் – அஞ்சி ஓடச் செய்தல். அது விரட்டுதலாக வழக்கில் உள்ளது. வணிகம் சிறப்பாக நடந்தால் வேலையாள், வாங்குவார், போவார் வருவார் எனப் பலர் இருப்பர். அந்நிலை இல்லாத போது கடைக்காரர் கை ஈயையும் கொசுவையும் ஓட்டுமே அன்றி, அளக்க, நிறுக்க வேண்டியிராதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்