சொல் பொருள்
கன்னம், குறடு
சொல் பொருள் விளக்கம்
கன்னம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cheek, jaw
Pincers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன நெற்றிச் சேவல் – அகம் 367/10-12 தளிரைப் போன்ற கன்னத்தினையும், அடர்த்தியான மயிரினையுடைய கழுத்தினையும் நிமிர்ந்த தலையின் மேல் முருக்கம் பூவினைப் போன்ற கொண்டையினையும் உடைய சேவல் மென் தோல் மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன கவை தாள் அலவன் – பெரும் 206-208 மெத்தென்ற தோலாலான மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த கவர்த்த காலையுடைய நண்டின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்