சொல் பொருள்
கொடுத்து வைத்தல் – எதிர்பாராத வாய்ப்புப் பெறுதல்
சொல் பொருள் விளக்கம்
அரும்பாடு படும் சிலர் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தவிப்பர். ஆனால் சிலர் சில வாய்ப்புகளால் எளிமையாக அதனை வரப்பெற்று விடுவர். அத்தகையரைக் ‘கொடுத்து வைத்தவர்’ என்பது பெறமுடியாதவர் பேசும் உரை. கொடுக்கமாட்டாதவனும் சிலவேளைகளில் கொடுத்து விடுவான், தகுதியில்லாதவனுக்கும் சில வேளைகளில் எதிர்பார்த்தது கிடைத்துவிடும். அத்தகையவனும் கொடுத்து வைத்தவன் எனப்படுவான். முன்னமே கொடுத்து வைத்திருக்கிறான். இப்பொழுது மீளப்பெறுகிறான் என்பது பொருளாம். “பெறுவான் தவம்” என்னும் திருக்குறள் குறிப்பு நோக்கத் தக்கதாம். அவன் தவக்கோலமே பிறரைக் கொடுக்க வைத்தது என்பதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்