சொல் பொருள்
சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு, சுழலுதல் , சுழற்சி, சுற்றுதல், சுற்று, சுற்றித்திரிதல்,
சொல் பொருள் விளக்கம்
சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whirling, revolving, roaming
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5 வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய உடங்கு கொட்பன போல் – கலி 105/20-22 ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும், உயிர்களை விடாமல் துரத்திச் செல்கின்ற சமயத்தில், நிறைந்திருக்கும் உயிர்களை உண்பதற்காக, ஒன்று சேர்ந்து சுற்றிவருவது போல் பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 632,633 பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுற்றித்திரிய விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4 விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன் நிரை பறை குரீஇ இனம் காலை போகி முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு இரை தேர் கொட்பின ஆகி – அகம் 303/11-13 வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம், காலையில் போய் வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு, ஒருங்கே இரையை தெரிந்தெடுக்க சுற்றிச்சுற்றிவருதலையுடையனவாகி, உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார் அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174 தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு, வானத்தே சுற்றித்திரிதலையுடையராய், வந்து ஒருசேரக் காண –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்