சொல் பொருள்
கொண்டைபோடுதல் – நாகரிகமின்மை.
சொல் பொருள் விளக்கம்
மகளிர் கொண்டைபோடுதல் நம் நாட்டில் கண்கூடு. முன்னர் ஆடவரும் கொண்டை போட்டனர். கல்வியறிவு பெற்றவரும், நகர நாகரிகம் வாய்ந்தவரும் கொண்டைபோடுவதை நாட்டுப்புறத்தாரின் நாகரிகமில்லாச் செயலாகக் கருதினர். அதனால், எவராவது ஏதாவது இடக்காகச் சொன்னாலும், குறைத்து மதிப்பிட்டாலும் ‘கொண்டை போட்ட ஆளைப் பார்த்துக்கொள்’ என்று தலையைத் தட்டிக் காட்டுவர். இவ்வழக்கால், கொண்டை போடுதல் என்பது அறியாமை, நாகரிகமின்மை என அவர்கள் கருதும் பொருள் தருவதாயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்