சொல் பொருள்
இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர்
சொல் பொருள் விளக்கம்
இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர். கொதுக்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. இலக்கிய வழக்கில் பிழிந்து எடுக்கப்பட்ட எச்சத்தைக் ‘கோது’ எனல் உண்டு. திப்பி என்பதும் தென்னக வட்டார வழக்கே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்