சொல் பொருள்
கொன்னுதல் – திக்குவாய்
சொல் பொருள் விளக்கம்
இயல்பாகப் பேசமுடியாமல் திக்கித்திக்கிப் பேசுபவரை நாம் காண்கிறோம். அவர் பேசும்போது அவர்படும் இடரால் நாம் வருந்தவும் செய்கிறோம். அவர் திக்குதல் நகைப்பை உண்டாக்குவதில்லை. அவர் மேல் பரிவையே உண்டாக்குகிறது. அவ்வாறு திக்குதலைக் கொன்னுதல் என்பதிலுள்ள முதற்சொல் ‘கொன்’ என்பதாம். கொன்னுதல் உறுப்புக்குறையால் ஏற்படுவது. ஒருவகை, அச்சத்தால் ஏற்படுவதும் ஒருவகை அஞ்சும் நிலையில் கொன்னைச் சொல் இடைநிலையாகப் பயன்படுதலைக் குறிப்பார் தொல்காப்பியர் (739), முன்னோர் அதனை அப்பொருளில் வழங்கியுள்ளமை வியப்பாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்