சொல் பொருள்
கொம்பு சீவல் – சினமுண்டாக்கி விடுதல்
சொல் பொருள் விளக்கம்
மாடுகளின் கொம்புகளைச் சீவுதல் வழக்கம் ‘அதிலும் முட்டும் மாடுகளின் கொம்பைச் சீவி அதன்மீது குப்பிமாட்டி, அக்குப்பியில் சதங்கையும் போட்டிருப்பர்’ மாடு வருகிறது, தலையசைக்கிறது என்பவை அறியாமல் நெருங்கிச் செல்ல நேர்பவர்க்கும் அறிவுறுத்தித் தீமையில் இருந்து அதுவிலக்கும். ஆனால் அம்மாட்டின் கொம்பைச் சீவிவிட்ட அளவில் நின்று விட்டால், என்ன நிகழும்? மழுக்கைக் கொம்பிலும் கூரான கொம்பால் கொடுமையாகக் குத்திக் கொலைப் பழியும் புரியும். அவ்வாறே சிலர், சிலர்க்குச் சில செய்திகளைச் சொல்லிச் சூடேற்றிக் குத்துவெட்டு கொலைப் பழிகளுக்கும் ஆளாக்கி விடுவர். அது கொம்பு சீவி விட்டது போன்றதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்