கொற்றம் என்பதன் பொருள்அரசாட்சி, வெற்றி, வீரம்; வலிமை; வன்மை.
சொல் பொருள் விளக்கம்
அரசாட்சி, வெற்றி, வீரம்; வலிமை; வன்மை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Sovereignty, kingship, government, success, victory, power, strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194 வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி கடும் சினத்த கொல் களிறும் கதழ் பரிய கலி_மாவும் நெடும் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு உடைய புகல் மறவரும் என நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/7-12 கடிய சினத்தையுடைய கொல்லும் களிறும், விரைந்த ஓட்டத்தையுடைய மனம் செருக்கிய குதிரையும் நெடிய கொடியைக் கொண்ட உயர்ந்த தேரும், நெஞ்சு வலிமையுடைய போரை விரும்பும் மறவரும் என நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாகக் கொண்டது வேந்தரது வெற்றி. கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59/6 வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் - மது 194,195 கொற்றம் எய்திய பெரியோர் மருக - பதி 88/14 வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் - அகம் 199/21 அற நெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால் நமர் என கோல் கோடாது - புறம் 55/12,13 வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என - சிலப்.புகார் 5/85 உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என - சிலப்.புகார் 5/162 நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது - சிலப்.மது 15/146 தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் - சிலப்.மது 19/20 கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு - சிலப்.மது 22/58 ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் கான வேங்கை கீழ் ஓர் காரிகை - சிலப்.வஞ்சி 25/56,57 வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என - சிலப்.வஞ்சி 25/92 பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என - சிலப்.வஞ்சி 25/150 வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் - சிலப்.வஞ்சி 26/27,28 குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என - சிலப்.வஞ்சி 26/61 எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர் - சிலப்.வஞ்சி 27/210,211 கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று - சிலப்.வஞ்சி 28/106,107 வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி - சிலப்.வஞ்சி 28/113 கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி - சிலப்.வஞ்சி 30/6 குட திசை ஆளும் கொற்றம் குன்றா - சிலப்.வஞ்சி 30/205
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்