சொல் பொருள்
தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது. எரியும் விளக்கில் எண்ணெய் திரி இருந்தாலும் சுடர் குறையும் போது திரியைச் சற்றே தூண்டி (மேலேற்றி) விட்டால் பளிச்சிட்டு எரியும். அதுபோல் சிலர்தாமே செயலாற்ற மாட்டார். அவரைத் தூண்டிவிட்டால் சிறந்த பணி செய்வார். இதனைச் சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்னும் பழமொழி விளக்கும். கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை என்பது ‘மடம்’ என்பதன் பொருளாக உரையாசிரியர் கூறுவர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்