சொல் பொருள்
சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும்
சொல் பொருள் விளக்கம்
சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும். கொக்கியை வளையத்துள் மாட்டுதலே பூட்டுதல் ஆகும். ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ளுமாறு வைப்பது கொளுத்து ஆயிற்று. தீயும் திரியும் அல்லது பற்று பொருளும் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ள வைப்பதே கொளுத்துதல் என்பதை ஒப்பிட்டுக் காணலாம். கொள்ளி, கொள்ளை என்பனவும் கொள்ளுதல் வகையால் அமைந்தவையே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்