கொள் என்னும் முல்லை நிலப் பயறு வகையைக் குறிக்கும்
1. சொல் பொருள்
(பெ) – காணம், கொள்ளு, முதிரை
(வி) – கொள்
2. சொல் பொருள் விளக்கம்
நீள்வட்டமாக மூன்றாகப் பிளந்த இலைகளையும், பசுமஞ்சள் நிறமான பூங்கொத்தினையும், நீண்டு வளைந்த காய்களையும், தட்டையான விதைகளையும் உடைய சிறு ஏறுகொடி.செடி முழுவதும் மருத்துவப் பயனுடையது.
கொள்ளு என்பது பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டையக் காலத்தில் இதை குதிரைக்கு உணவாகப் பயன்படுத்தி வந்தனர்
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி
இதற்கு மலையாளத்தில் மூதிரா எனவும் தெலுங்கில் உலாவாலு என வேறுப் பெயர்கள் இட்டு கூப்பிடுகின்றனர். இதைத் தவிர்த்து இந்தியில் குல்தி, அரபியில் அபுல் குல்த், சமற்கிருதத்தில் குளதா களை, சீன மொழியில் பியான் டௌ என உலகும் முழுதும் அழைக்கின்றனர்.
இது தமிழர் உணவுகளில் அவியல், துவையல், இரசம், பொறியலாக இடம்பிடிக்கின்றன.
மொழிபெயர்ப்புகள்
- மலையாளம் – മുതിര
- தெலுங்கு – ఉలవలు
3. ஆங்கிலம்
Horsegram, Dolichos uniflorus, Macrotyloma uniflorum ;
have
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/12,13 கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால் கோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு - புறம் 335/5 வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை - பதி 75/11
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் - திரு 100 முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - திரு 230 சாலி நெல்லின் சிறை கொள் வேலி - பொரு 246 கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக - சிறு 229 கணம்கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் - பெரும் 234 தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474 பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் - முல் 77 கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் - மது 264 கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் - மது 264 மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை - மது 364 விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன் - மது 526 கணம்கொள் அவுணர் கடந்த பொலம் தார் - மது 590 மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் - மது 594 மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் - நெடு 7 கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க - நெடு 8 கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை - நெடு 24 நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா - நெடு 27 குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க - நெடு 28 கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக - நெடு 50 நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை - குறி 35 சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி - குறி 192 கணம்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ - பட் 259 கணம்கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ - மலை 44 நேர்கொள் நெடு வரை நேமியின் தொடுத்த - மலை 238 பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை - மலை 317 வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த - மலை 435 வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் - நற் 23/2 பலர் கொள் பலகை போல - நற் 30/9 புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன் - நற் 66/3 கணம்கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி - நற் 101/3 கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே - நற் 113/12 கணம்கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த - நற் 138/3 அரண் பல கடந்த முரண் கொள் தானை - நற் 150/3 நெடும் தெரு அன்ன நேர்கொள் நெடு வழி - நற் 161/5 கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் - நற் 171/9 பொலம் தொடி போல மின்னி கணம்கொள் - நற் 197/9 நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி - நற் 212/2 கவவு கொள் இன் குரல் கேள்-தொறும் - நற் 212/9 அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே - நற் 212/10 வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ - நற் 228/7 காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த - நற் 256/9 நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு - நற் 268/5 நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் - நற் 273/7 வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி - நற் 305/7 அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள்/புன் புறா வீழ் பெடை பயிரும் - நற் 314/10,11 ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் - நற் 329/7 யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு - நற் 348/7 பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் - நற் 392/5 சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற - குறு 41/2 தொகு செம் நெற்றி கணம்கொள் சேவல் - குறு 107/2 நிலம் கொள் பாம்பின் இழிதரும் - குறு 134/6 இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி - குறு 207/3 புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் - குறு 279/3 செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த - குறு 282/1 முரண் கொள் துப்பின் செ வேல் மலையன் - குறு 312/2 பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் - குறு 314/3 கணம்கொள் சிமைய உணங்கும் கானல் - குறு 372/3 வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் - ஐங் 14/2 பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா - ஐங் 56/1 கணம்கொள் அருவி கான் கெழு நாடன் - ஐங் 183/1 புலம்பு கொள் மாலை மறைய - ஐங் 197/3 புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரை - ஐங் 270/3 அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் - ஐங் 458/2 தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு - பதி 12/6 பீடு கொள் மாலை பெரும் படை தலைவ - பதி 24/5 சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் - பதி 30/19 பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ - பதி 50/21 வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை - பதி 75/11 மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே - பதி 83/9 காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என - பரி 11/42 கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் - பரி 12/15 சாறு கொள் துறக்கத்தவளொடு - பரி 19/6 கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் - பரி 19/91 கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து - பரி 21/8 ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று - பரி 23/14 கணம்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - பரி 23/86 தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் - பரி 24/73 புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை - கலி 4/6 அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை - கலி 11/12 மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ - கலி 14/11 மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த - கலி 42/1 மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் - கலி 56/17 காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69/3 மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக - கலி 69/4 வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து - கலி 93/30 கணம்கொள் பல் பொறி கடும் சின புகரும் - கலி 105/16 ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு - கலி 105/71 தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் - கலி 108/58 கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து - கலி 109/1 கடி கொள் இரும் காப்பில் புல்இனத்து ஆயர் - கலி 110/1 காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார் - கலி 113/20 துனி கொள் துயர் தீர காதலர் துனைதர - கலி 120/21 செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை - கலி 126/3 முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4 புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை - கலி 130/7 கணம்கொள் இடு மணல் காவி வருந்த - கலி 131/37 தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் - கலி 133/17 கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி - கலி 134/13 மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி - கலி 134/21 கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த - அகம் 11/4 கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து - அகம் 13/13 புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை - அகம் 13/21 மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை - அகம் 19/11 கணம்கொள் அருவி கான் கெழு நாடன் - அகம் 22/2 திதலை அணிந்த தேம் கொள் மென் முலை - அகம் 26/13 குளிர் கொள் தட்டை மதன் இல புடையா - அகம் 32/6 வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே - அகம் 36/23 ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் - அகம் 52/6 பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் - அகம் 53/9 புலம்பு கொள் மாலை கேள்-தொறும் - அகம் 64/16 மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - அகம் 65/11 கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் - அகம் 73/12 மடம் கொள் மதைஇய நோக்கின் - அகம் 86/30 அரண் பல கடந்த முரண் கொள் தானை - அகம் 93/8 கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து - அகம் 98/14 வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய - அகம் 106/3 ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே - அகம் 116/19 வான் கொள் தூவல் வளி தர உண்கும் - அகம் 133/11 வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி - அகம் 138/5 நேர்கொள் நெடு வரை கவாஅன் - அகம் 162/24 குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை - அகம் 163/9 சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் - அகம் 169/7 செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை - அகம் 169/10 இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து - அகம் 174/1 ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் - அகம் 177/5 அரம்பு கொள் பூசல் களையுநர் காணா - அகம் 179/9 குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி - அகம் 183/11 கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய - அகம் 185/7 நன்னராளர் கூடு கொள் இன் இயம் - அகம் 189/13 புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர் - அகம் 203/15 கணம்கொள் வண்டின் அம் சிறை தொழுதி - அகம் 204/6 நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் - அகம் 216/1 நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் - அகம் 216/1 முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண் - அகம் 222/4 களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் - அகம் 227/11 சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ - அகம் 235/8 கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட - அகம் 250/5 மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் - அகம் 261/9 நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் - அகம் 263/8 புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த - அகம் 299/12 பறி கொள் கொள்ளையர் மறுக உக்க - அகம் 300/3 படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு - அகம் 303/14 துனி கொள் பருவரல் தீர வந்தோய் - அகம் 314/17 ஆடு கொள் முரசம் இழுமென முழங்க - அகம் 334/2 இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து - அகம் 334/13 ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் - அகம் 335/10 மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் - அகம் 342/5 ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் - அகம் 342/6 விழவு கொள் மூதூர் விறலி பின்றை - அகம் 352/5 வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் - அகம் 354/11 வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து - அகம் 370/14 ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் - அகம் 372/11 கலி கொள் சுற்றமொடு கரிகால் காண - அகம் 376/5 சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட - அகம் 388/14 நீடலர் வாழி தோழி தோடு கொள்/உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப - அகம் 393/21,22 சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி - அகம் 399/12 கொள் பதம் ஒழிய வீசிய புலனும் - புறம் 23/7 பெற்றனர் உவக்கும் நின் படைகொள்மாக்கள் - புறம் 29/17 குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல் - புறம் 33/5 தோடு கொள் வேலின் தோற்றம் போல - புறம் 35/9 களம் கொள் யானை கடு மான் பொறைய - புறம் 53/5 ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப - புறம் 53/14 கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை - புறம் 66/6 ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் - புறம் 67/2 தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி - புறம் 68/14 அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை - புறம் 69/9 கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக - புறம் 105/5 நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் - புறம் 109/2 கூடு கொள் இன் இயம் கறங்க - புறம் 153/11 நெறி கொள் வரி குடர் குளிப்ப தண்ணென - புறம் 160/6 குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் - புறம் 160/7 மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் - புறம் 168/8 இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் - புறம் 174/4 மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி - புறம் 180/5 செலவு ஆனாவே கலி கொள் புள்இனம் - புறம் 199/3 கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர் - புறம் 204/3 ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி - புறம் 211/16 பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் - புறம் 235/18 தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே - புறம் 238/8 தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப - புறம் 275/7 மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் - புறம் 283/4 மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் - புறம் 321/2 குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் - புறம் 325/3 துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு - புறம் 328/11 தேம் கொள் மருதின் பூ சினை முனையின் - புறம் 351/10 கொள் என விடுவை ஆயின் வெள்ளென - புறம் 359/16 அணங்கு உருத்து அன்ன கணம்கொள் தானை - புறம் 362/6
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்