சொல் பொருள்
கொள்ளி முடிவான் – ஓயாது தீமையாக்குபவன்
சொல் பொருள் விளக்கம்
கொள்ளி – நெருப்பு; முடிவான் – முடிந்து வைப்பவன், தனக்கு முடிந்து வைப்பவன். சிலபேர் எப்போதும் ஏதாவது தீமையைக் குடும்பத்துக்கு ஆக்கிக் கொண்டே இருப்பர். அவரைக் கண்டாலே பெற்றவர் உடன் பிறந்தவர் கொண்டவர் கொடுத்தவர் ஆகிய அனைவருக்கும் என்ன செய்வாரோ என்னும் அச்சம் உண்டாகும். அத்தகையரைக் ‘கொள்ளி முடிவான்’ என்பர். “கொள்ளி முடிவானுக்கு எப்போது போக்காடு வருமோ, நமக்கு நிம்மதி வருமோ” எனப் பெற்றவரையும் மற்றவரையும் படுத்தும் பேய்ப்பிறப்பனே கொள்ளி முடிவானாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்