சொல் பொருள்
கோது, மூக்கால்குடை, கொய், பறி, கிழி,
சொல் பொருள் விளக்கம்
கோது, மூக்கால்குடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
peck, hollow out with beak, pluck, rend, tear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10 மா மரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவிவிளையாடும் ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி முறி திமிர்ந்து உதிர்த்த கையள் – நற் 106/7,8 ஞாழலின் அழகிய கிளையின் தாழ்ந்திருக்கும் பூங்கொத்தினைக் கொய்து, இளந்தளிரை அதனுடன் சேரப்பிசைந்து உதிர்த்துவிட்ட கையினளாய் உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் நாறா வெண் பூ கொழுதும் – குறு 85/2-5 உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி சூல் நிறைந்த தன் பெட்டைக்குருவிக்கு அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் கூடு கட்ட இன்சுவையைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ள இனிய கழையான கரும்பின் மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களைக் அலகால் கிழித்து எடுத்துவரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்