Skip to content

சொல் பொருள்

தாவரங்களின் தளிர், சங்கில் வளையல்களைஅறுத்தது போக எஞ்சியிருக்கும் நுனிப்பகுதி,

சொல் பொருள் விளக்கம்

தாவரங்களின் தளிர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tender leaf, the tip of a shell which remains after cutting it for bangles

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/3

தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!

வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/1-3

யாகம் பண்ணாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்து எடுத்த
வளையல்கள் (அறுத்தது)போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் மொட்டுகள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *