Skip to content

சொல் பொருள்

மணி முதலியவற்றில் ஊடு நூலைப்புகுத்தி இணை, தரி, அரசன், பசு

சொல் பொருள் விளக்கம்

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

to string as beads, flowers, put on, king, cow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலி பல் கோத்த புலம்பு மணி தாலி – அகம் 7/18

பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்

வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182

வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன்

புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/6-8

வன்மையான அடிமரத்தையுடைய உன்ன மரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும்,
பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
கொண்ட அகன்ற மார்பினையுடைய பெரிய வள்ளல்தன்மையுடைய பாரி

இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/36,37

சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
பசுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இதை முடிக்காமல் போகமாட்டான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “கோ”

  1. உங்கள் தமிழ் தொண்டு மகிழ்ச்சி அளிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *