சொல் பொருள்
கோடி மண்வெட்டி – நிரம்பத்தின்னல்
சொல் பொருள் விளக்கம்
கோடி என்பது புதியது என்னும் பொருளது. புதிய மண்வெட்டி தேயாதது; கூரானது; நிரம்ப ஆழத்துச்சென்றும் அகலத்துச் சென்றும் மண்ணைப்பெருக அள்ளிவருவது. அம்மண் வெட்டிபோல் அள்ளி அள்ளித் தின்பவனைக் ‘கோடி மண்வெட்டி’ என்பர். பெருந்தீனியன் என்பது பொருளாம். சோற்றுப்பானை, சோற்றுவண்டி, குப்பை வண்டி என்பனவும் பெருந்தீனியனைக் குறிப்பதே. ‘சோற்றுத் துருத்தி’ என்றார் பட்டினத்தார். இத்தகையவர்களைக் கொண்டே “சோறு கண்ட இடம் சுவர்க்கம்” என்னும் புது மொழி எழுந்துள்ளதாம். குண்டோதரன் என்பது தொன்மவழக்கு. குண்டு = குழி, பள்ளம்; உதரன் = வயிறன்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்