சொல் பொருள்
புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர்
சொல் பொருள் விளக்கம்
மாறுகண் என்பது பொதுவழக்கு. எதையோ பார்ப்பது போல் தோற்றம் தந்து வேறொன்றைப் பார்ப்பதாக இருப்பதை மாறுகண் என்பர். புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர். கோணக்கால், கோணக்கை, கோணன், கோணையன் என்பவை எல்லாம் வளைவுப் பொருளில் வழக்கிலுள்ள தென்னகச் சொற்களாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்