1. சொல் பொருள்
(பெ) ஒரு பறவை
கோழி அடைக்கத்து கத்துக்கிறது – என்பதில் கோழி பெட்டை. கோழி கூவியது என்பதில் கோழி சேவல். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப் பெண்பிள்ளை என்னும் பெயரால் வழங்குவர்
2. சொல் பொருள் விளக்கம்
சங்க நூல்களில் கோழியைப் பற்றிச் சில பாடல்கள் கூறியுள்ளன. காட்டுக் கோழியிலிருந்து வீட்டுக் கோழியைப் பிரித்துணரவே மனைக்கோழி , மனை வாழளகு என்று அழைத்துள்ளனர் . மனையுறை கோழி என்றும் மனைச் செறிகோழி என்றும் அகநானூறு கூறுகின்றது . மனையில் வாழும் கோழிச்சேவலைத் தெளிவாக விளக்கியுள்ளனர் .
கோழி என்பது பொதுப்பெயர். சேவற்கோழி, பெட்டைக்கோழி என்பவை பால்பிரி பெயர்கள். ஆனால் கோழி என்பது பெட்டையின் சிறப்புச் சொல்லாகவும், சேவலின் சிறப்புச் சொல்லாகவும் அமையும். கோழி அடைக்கத்து கத்துக்கிறது – என்பதில் கோழி பெட்டை. கோழி கூவியது என்பதில் கோழி சேவல். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப் பெண்பிள்ளை என்னும் பெயரால் வழங்குவர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து – அகநானூறு 187
மனை உறை கோழி மறனுடைச் சேவல் 15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய – அகநானூறு 277
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப் – குறுந்தொகை 139
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா னுற்ற நோயே. – குறுந்தொகை 305
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்