சொல் பொருள்
கோழிகிண்டல் – காப்பின்மை, செயற்பாடின்மை.
சொல் பொருள் விளக்கம்
வீட்டிப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடைமுறை. கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக்கிளைக்காவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். விதை தெளித்துக் காக்காவிட்டால் அவ்விதையைக் கோழி கிண்டிக் கிளறித் தின்றுவிடும். முளைவிட்டு ஒன்றிரண்டு வருமாயின் அதுவும் அதன் கிண்டிக் கிளறலால் வேரழிந்து முளையழிந்து கெட்டுவிடும். ஆதலால் ‘கோழிகிண்டல்’ என்பது காவாமையால் ஏற்படுவது என்பதைக் கண்ட அறிவு, அதற்குக் காப்பிலாத் தன்மையை வழங்குகின்றது. அவன் வாழ்வில் கோழி கிண்டுகிறது என்றால், செயற்பாடற்ற வறுமையைக் காட்டுவதாக விரிந்தது
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்