சொல் பொருள்
கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல்
சொல் பொருள் விளக்கம்
கோழி பொதுப் பெயர். சேவற் கோழி, பெட்டைக்கோழி என இருபாற் பெயராம். கோழி கூவிப்பொழுது விடிதல் நாளும் அறிந்த செய்தி. கோழி வைகறையில் எழுந்து தனக்கியல்பான சுறுசுறுப்பாலும் விழித்த குறிப்பாலும் கூவும். அதனைக்கேட்டு அண்டை வீடு அடுத்த வீட்டுக் கோழிகளும் கூவும். மாறி மாறி அவை கூவிக் கொண்டிருக்கும். அதில் இருந்து கோழியாகக் கூவல் என்பதற்குப் பன்முறை அழைத்தல், கூப்பாடு போட்டுக் கூப்பிடல் என்னும் பொருள்கள் எழுந்தன. “கோழியாகக் கூவுகிறேன்; என்ன என்று கேட்டாயா?” என்பது இடிப்புரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்