சொல் பொருள்
கோவிந்தா! கோவிந்தா! – எல்லாமும் போயிற்று
சொல் பொருள் விளக்கம்
இறந்து போனவர்க்குப் பல்லக்கு, பாடை எனக் கட்டி இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போகும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்று சேர்ந்து சொல்லுவர். கோவிந்தன் தன் திருவடிப் பேற்றை அல்லது வைகுண்டத்தை அருளவேண்டும் என்பதற்காக வேண்டுவதாகக் குறிப்பர். ஆனால் கோவிந்தா கோவிந்தா என்பது இழப்பைக் குறித்தலால், “அவர் கோவிந்தா ஆகிவிட்டார்” என்றால் பொருளை எல்லாம் இழந்துவிட்டார் என்னும் பொருள் தருவதாக வழக்கில் வந்து விட்டது. பிள்ளைகள் விளையாடலில் அடுத்தவர்க்குத் தோல்வி வர வேண்டும் என்று கோவிந்தாப்போடுவதும் உண்டு. கோவிந்தனுக்கு உரிய விளி, கோவிந்தா!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்