சொல் பொருள்
சக்கைவைத்தல் – உறுதிசெய்தல்
சொல் பொருள் விளக்கம்
மாட்டுத் தாம்பணிகளில் மாடு பிடிப்பவர்களிடம் ‘சக்கை வைத்தல்’ நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று இல்லை; என்பதற்கு அடையாளமாகத் தரகர்கள் சக்கை வைப்பர். ‘சக்கை’ என்பது வைக்கோல்; சக்கை செத்தை எனவும் படும். சில இடங்களில் புல்லைப் பறித்துக் கையில் தருதலும் உண்டு. அதனை வாங்கிவிட்டால் பேச்சு மாறக் கூடாது என்பது இரு பக்கத்துக்கும் உறுதியாகும். சக்கை வாங்கிவிட்டால் கட்டுப்பட்டு நடத்தலைக் கடமையாகக் கொள்வர். சக்கை வைத்துவிட்டு மாறுதல் இழிவாக எண்ணப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்