சொல் பொருள்
சங்கு ஊதுதல் – சாதல்
சொல் பொருள் விளக்கம்
இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், “சேகண்டி” அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் ‘சங்கு ஊதிவிட்டார்கள்’ என்றால், “சாவாகிவிட்டது; தூக்கப்போகிறார்கள்” என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது. ஆதலால், சங்கு ஊதுதல் சாவின் அடையாளப் பொருளாகிவிட்டது. “சங்கு ஊதுமளவும் அவன் குணம் மாறாது” என்றும் “உனக்குச் சங்கு எப்போது ஊதுவார்களோ, எங்கள் சங்கடம் தீருமோ” என்றும் தீமையில் ஊறி நிற்பவர்களைப்பற்றி அவர்கள் செய்யும் தீமைக்கு ஆட்பட்டவர்கள் நினைப்பது இயல்பாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்