சொல் பொருள்
சதங்கை கட்டல் – ஆடவிடல்
சொல் பொருள் விளக்கம்
ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம் அவ்வழக்கம், ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலில் இருந்து வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து சொல்ல மாட்டார்; அத்துணிவு அவர்க்கு இல்லை; எண்ணமும் கூட இல்லை. அத்தகையரைச் சிலர் தூண்டிவிட்டும் ஏவிவிட்டும் கிளப்பி விடுவர். அவர் வந்து துணிவுடன் பேசுவர்; சொல்லிக் கொடுத்த சொற்களையெல்லாம் சொல்வர். அத்தகையவர் செயலைக் கண்டு வியப்படைந்தவர். “உனக்குச் சதங்கை கட்டி ஆட விட்டிருக்கிறார்கள்; நீயாகவா ஆடுகிறாய்? உன்னைத் தெரியாதா எனக்கு “என நகையாடுவர். இதனால் சதங்கை கட்டல் ஆட விடற் பொருளாதல் தெளிவாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்