சொல் பொருள்
சதாசிவம் என்னும் பெயர் பெயரைக் குறியாமல் எண்பது பணத்தைக் குறிக்கும் வழக்கம் செட்டிநாட்டில் உண்டு
சொல் பொருள் விளக்கம்
சதாசிவம் என்னும் பெயர் பெயரைக் குறியாமல் எண்பது பணத்தைக் குறிக்கும் வழக்கம் செட்டிநாட்டில் உண்டு. ‘எண்குணம்’ என்பது போன்ற ஒரு குறிப்பு வழி ஏற்பட்ட வழக்காக இஃது இருக்கவேண்டும். இறைவற்குக் கோச்செங்கட்சோழன் எடுத்த கோயில்களைப் போன்றதொரு எண் வழிப்பட்டதாகும். மருது பாண்டியர் மதுரைக் கோயில் வாயிலில் 1008 சரவிளக்கு அமைத்து, 1008 திருக்கோயில்களுக்கு விளக்கேற்றிய கருத்துப் போன்றது இத்தகையவை
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்