சொல் பொருள்
சவத்தல் என்பதற்கு மலிவு என்னும் பொருள் மதுரை வட்டாரத்தில் உண்டு
சொல் பொருள் விளக்கம்
ஈரப்பதமாக இருப்பதைச் சவத்தல் என்பது அறந்தாங்கி வட்டார வழக்கு. ஈரப்பதமாக இருப்பது விரைவில் கெட்டுப் போகுமாதலால் அதனை விலை குறைத்து மலிவாக விற்பர். ஆதலால் சவத்தல் என்பதற்கு மலிவு என்னும் பொருள் மதுரை வட்டாரத்தில் உண்டு. சவத்தல் என்பது போலவே பதத்தல் என்பது ஈரப்பதம் குறித்தல் பொது வழக்காகும். மழையால் பதப்பட்டுப் போனது என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்