சொல் பொருள்
(பெ) ஒரு பாத்திரம், குடுவை,
நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் ‘சாடி’ என்பர்
சொல் பொருள் விளக்கம்
வாட்ட சாட்டம் என்பவை இணை மொழிகள். வாட்டம் ‘வாடி’ என்றும், சாட்டம் ‘சாடி’ என்றும் வழங்கும். மர அறுவை ‘வாடி’ எனப்பட்டது (மரவாடி) போல் அமைந்தது சாடி. சாடுதல், ஓடுதல், புகுதல். நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் ‘சாடி’ என்பர். இவ்வாட்சி கூரிய பார்வையும் கொள்ளும் பொருளமைதியும் உடையதாகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Jar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/7,8 செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற எமது இளமை நலம் வீட்டுக்குள் அடங்கி ஒழிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்