சொல் பொருள்
சாடிக்கு ஏற்றமூடி – கணவனுக்கு ஏற்ற மனைவி
சொல் பொருள் விளக்கம்
கலத்தின் மேல்வாயும், மூடியின் உள்வாயும் பொருந்தியமையச் செய்யப்படும். அதனையே சாடிக்கு ஏற்றமூடி எனல் வழக்கு. ‘செப்பின் புணர்ச்சி’ என நட்பியலைக் கூறுவார் திருவள்ளுவர். குடும்பத்தில் கணவன் கருத்துக்கு ஒப்பி நடக்கும் மனைவி வாய்த்துவிட்டால் அவளைச் சாடிக்கு ஏற்ற மூடி எனச் சொல்வது வழக்கமாம். நல்ல கருத்தா அல்ல கருத்தா என்பது பற்றியதன்று செய்தி. இருவர் கருத்தும் ஒத்த கருத்து என்பதே குறிப்பு. பிறர்க்கு அவர்கள் செயற்பாடு எத்தகைத்தானாலும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு இருத்தல் அவர்கள் வாழ்வுக்குத் தக்க ஒன்றுதானே
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்