Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. மேலே விழுந்து அடி, 2. குத்திக்கிழி

2. (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு

சொல் பொருள் விளக்கம்

(பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fall on and beat up, gore, bullock cart

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் – கலி 101/41,42

கொல்லுகின்ற தன்மையுள்ள காளையை அடக்குபவர்களுக்கு, எமது நிறைந்த கரிய
கூந்தலுடையாளை மணமுடித்துக்கொடுப்போம் நாம்;

முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
———————-
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1-4

தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
———————–
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188

சிறிய வண்டியின் சக்கரத்தோடு,கலப்பையையும் சார்த்திவைத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *