சொல் பொருள்
(வி) ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி வை
2. (பெ) 1. சந்தனம், 2. வெளியூர் செல்லும் வணிகர் கூட்டம்,
சொல் பொருள் விளக்கம்
ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி வை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rest on something in a slanting position, sandal, trading caravan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர் கரும் கடை எஃகம் சாத்திய புதவின் – மலை 489,490 பருந்துகள் (சதைகளைத் தூக்கப்)பாய்ந்திறங்க, கள வெற்றிகொள்ளும் ஒளிரும் வாளையுடைய மறவர் (தம்)கரிய காம்பினையுடைய வேலைச் சாத்திவைத்திருக்கும் திட்டிவாசல்களையுடைய புலர்ந்த சாத்தின் புலரா ஈகை – பதி 61/7 பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும் சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15 வாணிகக் கூட்டத்தார் வழியில் இயங்குதல் இல்லாத உயர்ந்த மலையுச்சிகளை உடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்