சொல் பொருள்
சாப்பாடு போடல் – திருமணம் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
நண்பர்களுக்குள்ளும் அன்பர்களுக்குள்ளும் திருமண அகவையுடையவர்களெனின், “என்ன எப்பொழுது சாப்பாடு போட எண்ணம்?” போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா?” என வினவும் சாப்பாடு திருமணப் பொருட்டதாம். திருமணம் என்றாலே பலவகைக் கறிகள், கண்ணமுது, ‘பாயசம்’, அப்பளம் வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ்சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று. தாலிகட்டு முடிந்தால் இலை முன்னர்தான் பலரைப் பார்க்கலாம்! அவ்வளவு பாடு, சாப்பாடு! வாழ்த்தென்ன, வரவேற்பென்ன, ஓடியாபோகும்!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்