சொல் பொருள்
(வி) 1.. வாடு, 2. கெட்டுப்போ, 3. ஒளிமங்கிப்போ,
2. (பெ) படுக்கை
சொல் பொருள் விளக்கம்
வாடு, கெட்டுப்போ, ஒளிமங்கிப்போ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wither, perish, grow dim, bed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் செறுவின் நீள் நெய்தல் பூ சாம்பும் புலத்து ஆங்கண் – பட் 11,12 நீரையுடைய வயலில் உள்ள நீண்ட நெய்தல் மலர் வாடும் வயல்வெளிகளில், இஃது ஒத்தன் தன்_கண் பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் உருகுவான் போலும் உடைந்து – கலி 60/9-11 இவனொருத்தன் தன்னிடத்துள்ள போரிடும் களிற்றைப் போன்ற தன்மை கெட்டு உள்ளுக்குள் உருகுவான் போலிருக்கிறான், மனமுடைந்து நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ செல் கதிர் ஞாயிறே நீ – கலி 147/33-35 எனக்கு அருள்செய்யாத ஒருவனை நாடி நான் பிடித்துக்கொள்கிறேன், அது வரை உன்னுடைய பல கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகல்காலம் முடிய மறைந்துவிடாதே! சென்று சேரும் கதிர்களையுடைய ஞாயிறே நீ! கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் அதளோன் துஞ்சும் காப்பின் – பெரும் 150,151 வரகுக்)கற்றை வேய்ந்த கழிகளைத் தலையிலேயும் கொண்ட சேக்கையின்கண், 150 தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்