சொல் பொருள்
(பெ) 1. மென்மை, 2. வனப்பு, அழகு, 3. மேனி,
சொல் பொருள் விளக்கம்
1. மென்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tenderness, loveliness, gracefulness, beauty, body
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214 ஒட்டியாணத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன், மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37 மென்மையான வனப்பையும், முத்தை ஒத்த பல்லினையும், புது நிறை வந்த புனல் அம் சாயல் – மலை 61 புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்