சொல் பொருள்
சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய் வைத்தால் தூசி தும்பு விழும். பூச்சி பொட்டு அடையும். நலக்கேடு ஆக்கும். ஆதலால், கலங்கள் கவிழ்த்தி வைக்கப்படுதல் அறிவுசார் நடைமுறை. இது தொல் பழநாள் தொட்ட நடைமுறை என்பது, “என் மண்டை (கலம்) திறக்குநர் யார்” என்னும் புறநானூற்றால் புலப்படும். கலங்கள் சாய்த்து வைக்கப்பட்ட திண்டு (கரை) உடைய சமையலறையைச் சாய்ப்பாங்கரை என்பது அருமைமிக்கது. ‘சாய்ப்பு’ என்னும் அளவில் கூறுவது திருச்செந்தூர் வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்