சொல் பொருள்
(வி) 1. சாத்து, ஒன்றின் மேல் சாய்ந்த நிலையில் இருத்து, 2. நிரப்பு
திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர் கோயில் வட்டாரத்தில் ‘சார்த்து’ என்பது திருமண உறுதி எழுதும் ஓலையைக் குறித்து வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
பனை ஓலை வெண்மைக் குருத்தாக வெளிப்படும். பின்னர்ப் பசுமைக் காட்சி வழங்கும். அதன்பின் மஞ்சள் வண்ணம் கொள்ளும். மஞ்சள் வண்ண ஓலை சாரோலை. வெள்ளை வண்ண ஓலை குருத்தோலை. சாரோலைக் கண்டு குருத்தோலை சிரித்ததாம் என்பது பழமொழி. திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர் கோயில் வட்டாரத்தில் ‘சார்த்து’ என்பது திருமண உறுதி எழுதும் ஓலையைக் குறித்து வழங்குகின்றது. குருத்தோலை தலை நிமிர்ந்திருத்தலும், சாரோலை சரிந்து சாய்ந்து தாழ்தலும் கண்டறிக. அறிந்தால் மேற்சுட்டிய பழமொழி விளக்கமாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rest something as a slant, fill, replenish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189 குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சாய்த்து வைக்கப்பட்டமையால் நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி குடை அடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை – அகம் 275/1-3 உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய ஊற்றி நிரப்பி, பனங்குடையால் முகந்த நீரினைச் சொரிந்து வளர்த்த பந்தலில் படந்த வயலைக் கொடியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்