சொல் பொருள்
நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு. அதனைச் சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு. அதனைச் சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. கூட்டுமாறு, விளக்குமாறு, பெருக்குமாறு என்பவற்றில் உள்ளது போன்றது. மாறு கொண்டு (வைக்கோல், வளார், கொடி) செய்யப்பட்டவை மாறு ஆகும். ஆணி = தாங்குதல். தாங்கிப்பிடி என்பதை ஆணிப் பிடி எனல் நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்